Posts

Showing posts with the label News

உங்கள் பெயரை மாற்றம் செய்வதால் உங்களுடைய சொத்து விற்பனை உரிமை பாதிக்கப்படுமா?

Image
உங்கள் பெயரை மாற்றம் செய்வதால் உங்களுடைய சொத்து விற்பனை உரிமை பாதிக்கப்படுமா? நம் பெற்றோர் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆசை, ஆசையாக சொத்து வாங்கும் போது, அதை தன் செல்லக் குழந்தைகளின் பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதிலும், சின்ன வயதில் உங்களை செல்லமாக ஒரு பெயரில் அழைத்திருப்பார்கள். ஆனால், பிறகு வேறு பெயரை அலுவல் பூர்வ பெயராக பயன்படுத்தி வருவீர்கள். இப்போது உங்கள் பழைய பெயரில் உள்ள சொத்துக்கு நீங்கள் உரிமை கோர முடியுமா, அதை விற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உண்மை சம்பவம் ஒன்றின் உதாரணத்துடன் இந்தக் கேள்விகளுக்கு விடையை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். சட்ட ஆலோசகர் ஒருவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “நான் சிறு வயதில் இருந்தபோது என் தந்தை என் பெயரில் குடியிருப்பு மனை ஒன்றை வாங்கினார். அந்த சமயத்தில் என்னுடைய பாதுகாவலராக எனது தாயை நியமித்தார். ஆனால், என்னுடைய பெயர் பின்னாளில் மாற்றப்பட்டுவிட்டது. சொத்துப் பத்திரத்தில் உள்ள பெயர் என்னுடையது தான் என்பதை நிரூபனம் செய்வதற்கான எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. இதற்கிடையே, எனது

Rajinikanth:ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ்: ஒரே வேளை, அதுவா இருக்குமோ?

Image
Rajinikanth:ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ்: ஒரே வேளை, அதுவா இருக்குமோ? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் கமல் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் போயஸ் கார்டனுக்கு சென்று தன் நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் கமல். அவருடன் லோகேஷ் கனகராஜும் சென்றிருக்கிறார். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் லோகேஷ். முன்னதாக தலைவர் 169 படத்தை கமல் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் அந்த பட வேலையை துவங்க முடியவில்லை. ஆனால் அந்த பட வேலை எதிர்காலத்தில் நடக்கும் என்று அண்மையில் லோகேஷ் தெரிவித்தார். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் இந்நிலையில் கமலும், லோகேஷும் ரஜினியை சந்தித்து பேசியிருப்பதால் தலைவர் 170 படத்தை லோகேஷ் தான் இயக்குவார் போன்று என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறா

குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா?

Image
குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா? குக் வித் கோமாளியை பார்த்தால் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். குக் வித் கோமாளி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. மணிமேகலை, ஷிவாங்கி, பாலா, சக்தி, குரேஷி, பரத் அருண், ஷீத்தல், மூக்குத்தி முருகன் ஆகியோர் கோமாளிகளாக இருக்கிறார்கள். ஷெஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் வெங்கடேஷ் பட் கூறியது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. குழந்தை நான் குக் வித் கோமாளி பார்த்தேன். என் கவலை எல்லாம் மறந்து சிகிச்சைக்கு சென்றேன். இப்போ கையில் குழந்தை இருக்கு. நீ கண்டுப்பா அந்த நிகழ்ச்சியை பாரு, உனக்கு குழந்தை பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார். அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்றார் வெங்கடேஷ் பட். வெங்கடேஷ் பட் கூறியதை பார்த்த சமூக வலைதளவாசிகள் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். கர்ப்பம் வெங்கடேஷ் பட் கூறியதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து இந்த வருஷம் நான் கர்ப்பமாகியிருக்கிறேன் என்று ஒரு பெண் என

Nayanthara:என்னது, நயன்தாரா-விக்கி திருமணத்திற்கு 3 பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பா?

Image
Nayanthara:என்னது, நயன்தாரா-விக்கி திருமணத்திற்கு 3 பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பா? நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. நயன்தாரா நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கசிந்திருக்கும் அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போட்டிருக்கிறது. எது எப்படியோ, திருமணம் நடந்தால் போதும் என்கிறார்கள் ரசிகர்கள். அழைப்பு திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த அனைவரையும் அழைக்கவில்லையாம். மூன்றே மூன்று பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம். இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் முன்னிலையில் மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்களாம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். வரவேற்பு திருமணத்தை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தப் போகிறார்களாம். அந்த நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்களை அழைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரவர் பட வேலையில் ஈடு

கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை.

Image
கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை. பரீட்சைகள் சட்டத்திற்கமைய பரீட்சை ஆரம்பமாகி அரை மணித்தியாலம் தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குவது வழமையாகும். எனினும் இம்முறை நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்கள் பரீட்சைகள் ஆரம்பமாகி அரை மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக கால தாமதமாகி வருகை தந்தாலும் அவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார். தாமதமாகி வரும் மாணவர்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு அறிவித்து , அதன் பின்னர் அவர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்குமாறும் பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , இம்முறை வழமைக்கு மாறானதொரு சூழலில் பரீட்சைகள் இடம்பெறுகின்றமையால் பரீட்சை கடமைகளில் ஈடுபடு

சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

Image
சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய பரீட்சைகள் 5 மாதங்கள் காலம் தாழ்த்தப்பட்டு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று பரீட்சைகள் ஆரம்பமாகி ஜூன் முதலாம் திகதி நிறைவடையும். இம்முறை பாடசாலை ஊடாக 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதே போன்று ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். அதற்கமைய இம்முறை ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளர். இதற்காக நாடளாவிய ரீதியில் 3844 பரீட்சை நிலையங்களும் , 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சகல பரீட்சாத்திகளுக்கும்

தேர்வர்கள் கவனத்திற்கு…நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி முக்கிய அறிவிப்பு!

Image
தேர்வர்கள் கவனத்திற்கு…நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி முக்கிய அறிவிப்பு! ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல்  விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/    என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,தற்போது மே 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகியவற்றிற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க,தேர்வுக்கான ஆன்லைன் சமர்ப்பிப்பு மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை 30 மே 2022 வரை

சென்னை மக்களே உஷார், இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

Image
சென்னை மக்களே உஷார், இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதுபோல சாலை விபத்துகள் ஏற்பட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் சாலை விபத்துகளும் அதில் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் உள்ளது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது, உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு ஏற்கனவே நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தைக் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.  அதேபோல சென்னையில் விபத்துகளைக் குறைக்கவும் கூட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்களும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 134 பயணிகளும் உயிரிழந்தனர். அதேபோல 2929 வாகன ஓட்டிகளும் பின்னிருக்கையில் அமர்ந்த 365 பயணிகளும் க

யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் ஹேப்பி

Image
யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் ஹேப்பி இயக்குநர் சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’மாமனிதன்’. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் கூட்டாக இசையமைத்துள்ளனர். மேலும், யுவன் சங்கர் ராஜா படத்தை தயாரித்தும் உள்ளார். தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார்.  மேலும் படிக்க | ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?! படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கும் படக்குழு, சரியான தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது. இதனால், ஏற்கனவே, 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  மாமனிதன் திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ரிலீஸ் மே 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும

அந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் கல்யாண விஷயத்தை கேட்டு கண்ணீர் விட்ட பிரியங்கா! ஏன் தெரியுமா?

Image
அந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் கல்யாண விஷயத்தை கேட்டு கண்ணீர் விட்ட பிரியங்கா! ஏன் தெரியுமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா, அஜய் கிருஷ்ணா - ஜெஸி திருமணம் விஷயத்தை கேட்டு சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா? விஜய் டிவி பிரியங்கா என்றாலே அவரின் சிரிப்பு, கலாய், பேச்சு தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவரின் ரைமிங், டைமிங் காமெடிக்களுக்காகவே அந்த ஷோவை மிஸ் செய்யாமல் பார்க்கும் அளவுக்கு ஒரு கூட்டமே இருக்கிறது. விஜய் டிவியில் உள்ள எல்லா பிரபலங்களுடனும் பிரியங்கா ரொம்ப குளோஸ். அதுவும் அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் இருக்கும் போட்டியாளர்கள், உடன் பணியாற்றும் அனைவருடனும் பிரியங்கா குளோஸ் ஃபிரண்ட்ஷிப்புடன் பழகுவார் என்பது பல வீடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதையும் படிங்க.. பிக் பாஸ் வருண் – அக்‌ஷராவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்! அப்படி விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் இருந்து ஸ்டார்ட் மியூசிக் சென்ற பிரபல தான் அஜய் கிருஷ்ணா. இவருக்கு சமீபத்தில் தான் ஜெஸி என்ற ப

அமெரிக்காவில் இந்திய வம்சாவழி மாணவர் மீது கடும் தாக்குதல்!: இணையத்தில் வெளியான காணொலியால் டெக்சாஸில் பரபரப்பு..!!

Image
டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்திய அமெரிக்க மாணவர் கொடுமைப்படுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெக்சாஸில் உள்ள (COPPELL MIDDLE SCHOOL) உணவு கூடத்தில் அமர்ந்திருந்த 14 வயது இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க மாணவர் எழுந்திரிக்க சொல்லி மிரட்டுவதும், பின்னர் மாணவர் கழுத்தை தனது கைகளால் நெரித்து இழுத்து தரையில் தள்ளும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. நிகழ்வின் போது உடன் இருந்த மாணவர் ஒருவர் இதனை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவழி மாணவரை 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்திருப்பதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. இதையடுத்து பள்ளியின் பாரபட்ச... விரிவாக படிக்க >>

எங்களிடம் தரமான பந்துவீச்சு வரிசை உள்ளது; கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி

Image
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த 63வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன் எடுத்தது. ஜெய்ஸ்வால் 41 (29 பந்து), படிக்கல் 39 (18 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) சஞ்சு சாம்சன் 32 ரன் அடித்தனர். லக்னோ பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியில், டிகாக் 7, ராகுல் 10, படோனி 0, குர்னல் பாண்டியா 25, ஸ்டாய்னிஸ் 27 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக தீபக்கூடா 59 ரன் (39பந்து), அடித்தார். 20 ஓவரில் லக்னோ 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் போல்ட், பிரசித்... விரிவாக படிக்க >>

ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Image
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை மாநில மத்திய அரசுகள் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரளாவை சேர்ந்த நபாத் பதாக் என்ற 10ஆம் வகுப்பு மாணவி தனது நண்பருடன் சேர்ந்து கோழிக்கோட்டில் உள்ள ஆற்றின் நடுவே செல்லும் பாலத்தில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார் . அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வருவதை கவனிக்காத நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நபாத் பதாக் பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தின் அருகே விழுந்த அவருடைய நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டு மர

தியேட்டரில் நிஜமாவே கண்கலங்கி அழுத டான் இயக்குநர்.. வைரலாகும் வீடியோவுக்கு அவர் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!

Image
தியேட்டரில் நிஜமாவே கண்கலங்கி அழுத டான் இயக்குநர்.. வைரலாகும் வீடியோவுக்கு அவர் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க! சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் சிபி சக்கரவர்த்தி. தனது சொந்த அனுபவத்தையே படமாக எடுத்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார் சிபி சக்கரவர்த்தி என பலரும் பாராட்டி வருகின்றனர். டான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் தியேட்டரில் தான் இயக்கிய படத்தை பார்த்து அழுவதை போலவே இயக்குநர் சிபி சக்கரவர்த்தியும் முதல் நாள் காட்சியை பார்த்து கண் கலங்கி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. டான் படத்தின் ஒளிப்பதிவாளர் பாஸ்கரனே இந்த வீடியோவையும் எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நிஜமாகவே இத்தனை நாட்கள் கனவு மற்றும் உழைப்பு கண் முன்னே பெரிய திரையில் தெரியும்போது என்னையும் மீறி கலங்கி விட்டேன். அந்த நினைவுகளை படம் பிடித்ததற்கு ரொம்பவே நன்றி பாஸ்கரன் என ஒளிப்பதிவாளருக்கு நன்றி கூறியுள்ளார் சிபி சக்கரவர்த்தி. ஒவ்

பங்கு சந்தை முதலீட்டுக்கு சிம்பிள் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி..?

Image
பங்குசார் முதலீடுன்னு வரும் போது நேரடியா பங்குகளில் முதலீடு செய்யலாம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்கள் வழியா முதலீடு செய்யலாம். நேரடிப் பங்குன்னா நிறையப் படிக்கணும், தெரிஞ்சிக்கணும், தொடர்ந்து கண்காணிக்கணும் இதுக்கெல்லாம் மேல மாதா மாதம் சிறுதொகை முதலீடு செய்வது கடினம். மியூச்சுவல் ஃபண்ட் வழி முதலீட்டுக்கும் அடிப்படைகள் தெரிஞ்சிக்கணும் என்றாலும் நேரடிப்பங்கு அளவுக்கு அறிவு தேவையில்லை. நிறையப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் இவ்வழியில் ரிஸ்க் கொஞ்சம் கம்மி என்று சொல்லலாம். சரி எதிர்கால வாழ்க்கைக்குச் சேமிக்கவும், முதலீடு செய்யவும் முடிவு பண்ணிட்டீங்க, எங்கேருந்து ஆரம்பிக்கறது? என்ன செய்யறது? ரொம்ப யோசிக்கத் தேவையில்லாத ஒரு ரெசிப்பி இது மொதல்ல உங்க ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு டெர்ம்... விரிவாக படிக்க >>

பிஎப்ஐ, எஸ்டிபிஐ தீவிரவாத அமைப்புகள்: கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

Image
பிஎப்ஐ, எஸ்டிபிஐ தீவிரவாத அமைப்புகள்: கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து | PFI, STPI are Terrorist organizations says kerala HC judge - hindutamil.in விரிவாக படிக்க >>

இந்த இரண்டையும் நான் செய்வேன்: விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றி விராட் கோலி

Image
விரிவாக படிக்க >>

ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!

Image
ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?! இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப், ரசிகர்களிடையே உருவாக்கிய தாக்கம் அதன் இரண்டாவது பாகத்தை எதிர்நோக்கவைத்தது.  அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி வெளியானது கே.ஜி.எஃப்-2. தெலுங்கிலிருந்து பான் - இந்தியா ரிலீஸாக வெளியான பாகுபலி சீரீஸ் படங்கள் வசூல் வேட்டை நடத்தியிருந்தாலும், பிற தென்னிந்தியப் படங்கள் அப்படியான சாதனைகளை நிகழ்த்தவில்லை.  குறிப்பாக, கன்னட சினிமாவிலிருந்து அப்படி ஒரு படம் அண்மைக்காலத்தில் வந்திருக்கவில்லை. இந்த வரலாற்றைத்தான் தவிடுபொடியாக்கித் தற்போது புதிய வரலாறு எழுதியிருக்கிறது கே.ஜி.எஃப்-2.                                                                                இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்துவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்றால் எந்த அளவுக்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். தென்னிந்தியா மட்டுமல்ல; வசூல் வேட்டையில் பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை இந்த கே.ஜி.எஃப்- 2. இரண்டாம் ப

நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’

Image
நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’ விஜய் நடிப்பில் வெற்றிகராக ஓடிய பீஸ்ட் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் பீஸ்ட் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த மாதம் 13-ம்தேதி பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தில் விஜய் உளவுத்துறை முன்னாள் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள். படம் வெளிவந்த பின்னர் கலவை விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் பாதிப்பை சந்திக்கவில்லை. படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்த நிலையில், பலவீனமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியில் படம் தோல்வியை சந்தித்துள்ளது. இதையும் படிங்க - கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! பீஸ்ட்டில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மெகா ஹிட் ஆகியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக படத்திலிருந்து ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையும் படிங்க - 17 அரியர்

ஷாங்காய் லாக்டவுன்.. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..!

Image
ஷாங்காய் லாக்டவுன்.. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..! இந்த நிலையில் சீனாவிலும் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் சப்ளை சங்கிலியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக உதிரி பாகங்கள் சப்ளையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கணினி மற்றும் மின்சாதன பொருட்கள் உற்பத்தியானது பெரிதும் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவின் முக்கிய தொழில் நகரமான ஷாங்காய் பாதிப்பால், உலகளவில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மூலதன பொருட்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதே சீனாவின் இரண்டாவது பெரிய நகரமான குன்ஷானனில் விதிகப்பட்டுள்ள கட்டுப்பாட்டினால், பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. இது உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான முக்கிய உதிரி பாகங்கள் சப்ளையராக திகழ்ந்து வரும் ஒரு நகரமாகும். சர்வதேச நாடுகளில் பலவும் சீனாவின் உதிரி பாகங்களை சார்ந்திருப்பதால், அது உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அண்டை நாடுகளின்