Justice has fallen down! \"- KS Alagiri in extreme anger-1986484353
நீதி கீழே சாய்ந்துவிட்டது!\" - உச்சக்கட்ட கோபத்தில் கே.எஸ்.அழகிரி பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம்தான் அந்த ஏழு பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தது. ஆனால், இன்றைக்கு உச்ச நீதிமன்றம் பேரறிவாளனைமட்டும் விடுதலை செய்திருக்கிறது. பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்றோ, கொலைக் குற்றத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தினார் என்கிற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு பேரறிவாளனை விடுதலை செய்திருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. பேரறிவாளன் ஒரு தமிழன் என்பதால், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனப் பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஒரு தமிழன் கொலைக் குற்றத்துக்கு உள்ளானால் அவரை விடுதலை செய்துவிடலாம் என்பது நியாயமா... இன்று நீதியும் செங்கோலும் கீழே சாய்ந்துவிட்டன என்பது என்னுடைய கருத்து'' என்றார்.