தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லக்கில் திரும்பிய கள்ளழகரை வழியனுப்பிய பக்தர்கள்
தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லக்கில் திரும்பிய கள்ளழகரை வழியனுப்பிய பக்தர்கள் மதுரை: வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்து விட்டு இன்று அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைக்கு திரும்பினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகருக்கு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லக்கில் திரும்பிய கள்ளழகரை வழியனுப்பிய பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் தேரோட்டத்துடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 14ஆம் தேதி மலையில் இருந்து மதுரைக்கு வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்த எதிர்சேவை கோலாகலமாக நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் கள்ளழகர் வைகையில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசனம் செய்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக...