தியேட்டரில் நிஜமாவே கண்கலங்கி அழுத டான் இயக்குநர்.. வைரலாகும் வீடியோவுக்கு அவர் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!


தியேட்டரில் நிஜமாவே கண்கலங்கி அழுத டான் இயக்குநர்.. வைரலாகும் வீடியோவுக்கு அவர் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!


சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் சிபி சக்கரவர்த்தி. தனது சொந்த அனுபவத்தையே படமாக எடுத்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார் சிபி சக்கரவர்த்தி என பலரும் பாராட்டி வருகின்றனர்.

don

டான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் தியேட்டரில் தான் இயக்கிய படத்தை பார்த்து அழுவதை போலவே இயக்குநர் சிபி சக்கரவர்த்தியும் முதல் நாள் காட்சியை பார்த்து கண் கலங்கி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

டான் படத்தின் ஒளிப்பதிவாளர் பாஸ்கரனே இந்த வீடியோவையும் எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நிஜமாகவே இத்தனை நாட்கள் கனவு மற்றும் உழைப்பு கண் முன்னே பெரிய திரையில் தெரியும்போது என்னையும் மீறி கலங்கி விட்டேன். அந்த நினைவுகளை படம் பிடித்ததற்கு ரொம்பவே நன்றி பாஸ்கரன் என ஒளிப்பதிவாளருக்கு நன்றி கூறியுள்ளார் சிபி சக்கரவர்த்தி.

ஒவ்வொரு இயக்குநருக்கும் தனது முதல் படத்தை பெரிய திரையில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் பார்க்கும் போது நிச்சயமாக கண்கள் குளமாகத்தானே செய்யும் எனக் கூறியுள்ள ரசிகர்கள், இப்படியொரு தந்தை – மகன் பாச படத்தைக் கொடுத்து எங்களையும் சேர்த்து கிளைமேக்ஸில் அழ வச்சிட்டிங்க சிபி சக்கரவர்த்தி அண்ணா என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

25 Healthy Dinners

How to Make Unique Blue amp White Chinoiserie Ornaments tutorial #ChinoiserieOrnaments

The Best Peanut Butter According to Chefs #Butter