அந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் கல்யாண விஷயத்தை கேட்டு கண்ணீர் விட்ட பிரியங்கா! ஏன் தெரியுமா?


அந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் கல்யாண விஷயத்தை கேட்டு கண்ணீர் விட்ட பிரியங்கா! ஏன் தெரியுமா?


சூப்பர் சிங்கர் பிரியங்கா, அஜய் கிருஷ்ணா - ஜெஸி திருமணம் விஷயத்தை கேட்டு சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா?

விஜய் டிவி பிரியங்கா என்றாலே அவரின் சிரிப்பு, கலாய், பேச்சு தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவரின் ரைமிங், டைமிங் காமெடிக்களுக்காகவே அந்த ஷோவை மிஸ் செய்யாமல் பார்க்கும் அளவுக்கு ஒரு கூட்டமே இருக்கிறது. விஜய் டிவியில் உள்ள எல்லா பிரபலங்களுடனும் பிரியங்கா ரொம்ப குளோஸ். அதுவும் அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் இருக்கும் போட்டியாளர்கள், உடன் பணியாற்றும் அனைவருடனும் பிரியங்கா குளோஸ் ஃபிரண்ட்ஷிப்புடன் பழகுவார் என்பது பல வீடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க.. பிக் பாஸ் வருண் – அக்‌ஷராவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!

அப்படி விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் இருந்து ஸ்டார்ட் மியூசிக் சென்ற பிரபல தான் அஜய் கிருஷ்ணா. இவருக்கு சமீபத்தில் தான் ஜெஸி என்ற பெண்ணுடன் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம் ஆகும். இந்த ஜோடியின் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என பல வீடியோக்கள் இணையத்தில் தற்சமயம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இவர்கள் இருவரும் ஜோடியாக அளித்த சில பேட்டிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படி ஒரு பேட்டியில் தான் அஜய் கிருஷ்ணா, பிரியங்கா குறித்து இந்த உண்மையை பகிர்ந்துள்ளார்.


 




View this post on Instagram






 

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பிரியங்கா வீட்டுக்கு திரும்பிய 1 வாரம் கழித்து மீண்டும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வந்தார். அப்போது தான் அஜய் கிருஷ்ணா முதன்முறையாக பிரியங்காவிடம் நிச்சயதார்த்தம் முடிவாகி விட்டதாக கூறி இருக்கிறார். சந்தோஷம் கலந்த ஆச்சரியத்தில் பிரியங்கா அஜய் கிருஷ்ணாவை கட்டிபிடித்து வாழ்த்துக்கள் கூறினாராம் அப்போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததையும் அஜய் கவனித்துள்ளார்.

இதையும் படிங்க.. ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது! உங்களுக்கு தெரியுமா?

இந்த சம்பவத்தை இன்னும் மறக்காத அஜய், மிகவும் நெகிழ்ச்சியாக பாசத்துடன் பிரியங்கா குறித்த இந்த தகவலை பேட்டியில்பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

25 Healthy Dinners

How to Make Unique Blue amp White Chinoiserie Ornaments tutorial #ChinoiserieOrnaments

The Best Peanut Butter According to Chefs #Butter