யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் ஹேப்பி


யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் ஹேப்பி


இயக்குநர் சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’மாமனிதன்’. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் கூட்டாக இசையமைத்துள்ளனர். மேலும், யுவன் சங்கர் ராஜா படத்தை தயாரித்தும் உள்ளார். தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். 

மேலும் படிக்க | ஆரம்பிக்கலாங்களா...‘பிக்பாஸ் 6’ சீசனை நடத்தப்போவது கமலா, சிம்புவா?!

படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கும் படக்குழு, சரியான தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது. இதனால், ஏற்கனவே, 3 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படத்தின் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

மாமனிதன் திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ரிலீஸ் மே 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் படம் வெளியாகவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு புதிய தேதியை படக்குழு அறிவித்தது. அதாவது ஜூன் 24 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, படம் ஜூன் 23 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. தேதிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டாலும், படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் யுவன் சங்கர் ராஜா உள்ளார்.

மேலும் படிக்க | வெற்றிமாறனின் விடுதலைக்காக உருவாகும் கிராமம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog

25 Healthy Dinners

How to Make Unique Blue amp White Chinoiserie Ornaments tutorial #ChinoiserieOrnaments

The Best Peanut Butter According to Chefs #Butter