ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி உள்பட புகைப்படங்கள் எடுக்க கூடாது என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பதும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பலர் உயிரிழந்ததை அடுத்து இது குறித்த விழிப்புணர்வை மாநில மத்திய அரசுகள் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கேரளாவை சேர்ந்த நபாத் பதாக் என்ற 10ஆம் வகுப்பு மாணவி தனது நண்பருடன் சேர்ந்து கோழிக்கோட்டில் உள்ள ஆற்றின் நடுவே செல்லும் பாலத்தில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார் .
அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் – கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வருவதை கவனிக்காத நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நபாத் பதாக் பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தின் அருகே விழுந்த அவருடைய நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Spread the love
Comments
Post a Comment