உங்கள் பெயரை மாற்றம் செய்வதால் உங்களுடைய சொத்து விற்பனை உரிமை பாதிக்கப்படுமா?


உங்கள் பெயரை மாற்றம் செய்வதால் உங்களுடைய சொத்து விற்பனை உரிமை பாதிக்கப்படுமா?


நம் பெற்றோர் உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆசை, ஆசையாக சொத்து வாங்கும் போது, அதை தன் செல்லக் குழந்தைகளின் பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதிலும், சின்ன வயதில் உங்களை செல்லமாக ஒரு பெயரில் அழைத்திருப்பார்கள். ஆனால், பிறகு வேறு பெயரை அலுவல் பூர்வ பெயராக பயன்படுத்தி வருவீர்கள். இப்போது உங்கள் பழைய பெயரில் உள்ள சொத்துக்கு நீங்கள் உரிமை கோர முடியுமா, அதை விற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

உண்மை சம்பவம் ஒன்றின் உதாரணத்துடன் இந்தக் கேள்விகளுக்கு விடையை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். சட்ட ஆலோசகர் ஒருவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“நான் சிறு வயதில் இருந்தபோது என் தந்தை என் பெயரில் குடியிருப்பு மனை ஒன்றை வாங்கினார். அந்த சமயத்தில் என்னுடைய பாதுகாவலராக எனது தாயை நியமித்தார். ஆனால், என்னுடைய பெயர் பின்னாளில் மாற்றப்பட்டுவிட்டது. சொத்துப் பத்திரத்தில் உள்ள பெயர் என்னுடையது தான் என்பதை நிரூபனம் செய்வதற்கான எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை.

இதற்கிடையே, எனது தந்தை இறந்துவிட்டார். நானும் கூட மேஜர் ஆகிவிட்டேன். தற்போது சொத்தை விற்பனை செய்ய விரும்புகிறேன். நான் தான் அந்த சொத்துக்கு உரிமையாளர் என்பதை எப்படி நிரூபனம் செய்வது? சொத்தில் என் தாயாருக்கு பங்கு உண்டா? எனது சகோதரனும், சகோதரியும் இந்த சொத்தில் உரிமை கோர முடியுமா? குடும்ப பயன்பாட்டிற்காகத்தான் அந்த சொத்து வாங்கப்பட்டது என்று எனது தாயார் தெரிவிக்கிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see... ஓய்வூதியத்திற்காக இந்தியா ஒதுக்கும் தொகை இவ்வளவா?

சட்ட ஆலோசகரின் பதில்

முதலில் உங்கள் பெயர் மாற்றம் குறித்து அரசிதழில் நீங்கள் அறிவிப்பு வெளியிடவில்லை எனத் தெரிகிறது. ஆகவே, நீங்கள் குடியிருக்கும் பகுதியில், பொருந்தத்தக்க அதிகாரி எவரோ, அவர் முன்னிலையில் நீதிப்பணி சாராத ஸ்டாம்ப் ஒட்டி, உங்கள் பெயர் குறித்து பிரமாணப் பத்திரம் ஏற்படுத்த வேண்டும்.

இதைத் தொடர்ந்து உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில், இரண்டு பெயர்களிலும் உள்ள நபர் நீங்கள் ஒருவரே என்று அறிவிப்பு வெளியிட வேண்டும். உங்கள் தாயாரை பாதுகாவலராக நியமித்து, உங்கள் தந்தை சொத்து வாங்கியது சட்டப்படியானது தான். அது செல்லுபடியாகும்.

ஆனால், சட்டம் என்ன சொல்கிறது என்றால், நீங்கள் மேஜர் ஆன பிறகு அந்த சொத்து முழுமையாக உங்களுக்கு மட்டுமே சொந்தம் என தெரிவிக்கிறது. நீங்கள் மேஜர் ஆன பிறகு உங்கள் தாயாருக்கு அதில் உள்ள உரிமை ரத்தாகிவிடும். இனி நீங்கள் மட்டுமே சொத்துக்கு உரிமையாளர்.

நீங்கள் தான் உரிமையாளர்

குறிப்பிட்ட சொத்தை உங்கள் குடும்ப பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தாலும், அது உங்களின் பழைய பெயரில் இருந்தாலும், நீங்கள் தான் அந்த சொத்துக்கு உரிமையாளர். சொத்துக்கு நீங்கள் தான் உரிமையாளர் என்ற நிலையில், உங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு உங்கள் தாயாரோ அல்லது உடன் பிறந்தவர்களோ அந்த சொத்துக்கு வாரிசுதாரர்களாக இருக்க முடியாது.

இந்த சொத்து தொடர்பாக அவர்கள் உங்களை எதிர்த்து ஏதேனும் வழக்கு தொடுத்தால், சொத்து ஆவணத்தில் உள்ள பெயரிலும், இப்போதைய அலுவல் பெயரிலும் இருப்பவர் நீங்கள் ஒருவரே என்பதை நிரூபிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

Fun Elf On The Shelf Ideas

Discover the best things to do in Guernsey for cruise visitors

Sauder Orchard Hills 4 Drawer Chest Carolina Oak finish #Carolina