ரெடியா! இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிச்சு எடுக்க போகும் கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்? இந்த நிலையில் இன்று, 19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாளும் தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் நாளை மழை குறைவாக இருக்கும். 20.05.2022 முதல் 22.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டி இருக்கும் மாவட்டங்களிலும் அரபிக்கடலை ஒட்டியும் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை நிலை சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நக...