நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’ விஜய் நடிப்பில் வெற்றிகராக ஓடிய பீஸ்ட் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் பீஸ்ட் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த மாதம் 13-ம்தேதி பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தில் விஜய் உளவுத்துறை முன்னாள் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள். படம் வெளிவந்த பின்னர் கலவை விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் பாதிப்பை சந்திக்கவில்லை. படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்த நிலையில், பலவீனமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியில் படம் தோல்வியை சந்தித்துள்ளது. இதையும் படிங்க - கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! பீஸ்ட்டில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மெகா ஹிட் ஆகியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக படத்திலிருந்து ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையும் படிங்க - 17 அரியர்...