தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்


தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்


ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு மனிதர்கள் தொடர்ந்து பிரச்சினைகள் மாட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால் ஒரு சிலர் இதிலிருந்து எளிதாக மீண்டும் வெளியில் வந்து விடுகின்றனர். ஒரு சிலருக்கு ஒரு பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சனை வந்து நிற்கிறது. இவ்வாறு இவர்கள் மன நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தன்னையும் அறியாமல் செய்த பாவங்களாகவும் இருக்கலாம். இந்த பாவங்களில் இருந்து விடுபட்டால் மட்டும்தான் இவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். எனவே இவர்கள் செய்த பாவங்கள் தீர இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sad2

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஏழு பிறவிகள் எடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஏழு பிறவியிலும் செய்த அத்தனை பாவங்களும் போக்க சனிக்கிழமை காலை காகத்திற்கு ஒரு பிடி சாதத்துடன் எள் சேர்ந்து பிசைந்து வைக்க வேண்டும். வாரந்தோறும் இதனை தவராது செய்ய வேண்டும். தினமும் காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது நாம் பச்சரிசி மாவில் கோலம் போட்டால் நம்முடைய பாவங்கள் நீங்குவதாக ஐதீகம் உண்டு.

பச்சரிசி மாவைக் கொண்டு கோலம் போடும் பொழுது அது தெய்வீக தன்மை ஆக மாறுகிறது. கோலமும் பிரகாசமாக ஜொலிக்கும், அதை சாப்பிட வரும் எறும்புகள் மூலம் உங்களுக்கு புண்ணியமும் பெருகும். இப்படி எறும்புகளுக்கு உணவிடுவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீரும்.

aiswarya-kolam

சனிக்கிழமையில் நீங்கள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். சூரிய உதயத்தின் பொழுது சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். விநாயகரை சுற்றி நீங்கள் கையில் வைத்திருக்கும் இந்த பச்சரிசி மாவை போட வேண்டும். இதனை உண்ண வரும் எறும்புகள் மூலம் நம்முடைய ஏழு ஏழு பிறவி பாவமும் நீங்குவதாக நம்பப்படுகிறது.

- Advertisement -

ஒரு எறும்பு, நீங்கள் வைத்த பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு போய் சாப்பிட்டாலும் நீங்கள் செய்த பல பாவங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
எறும்புகளின் எச்சில் பட்ட எந்த ஒரு உணவும் இரண்டே கால் வருடம் வரை கெட்டு போவது இல்லை. இந்த இரண்டேகால் வருடம் நாம் தானமாக கொடுத்த உணவானது எறும்புக்கு பயன்படுகிறது. என்பதை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டே இருப்பார்களாம்.

ant1

இரண்டரை வருடத்திற்கு கிரக நிலைகள் மாற்றம் அடையும் பொழுது எறும்பு புற்றுக்குள் நாம் இட்ட பச்சரிசியின் தன்மையும் மாறும். இதனால் தான் எறும்புகளுக்கு உணவிடுவதன் மூலம் நம் பாவங்கள் நீங்குவதாக ஐதீகம் சொல்லப்பட்டுள்ளது. எனவே அறியாமல் செய்த பாவங்களுக்கு நாம் அனுபவிக்கும் தண்டனையில் இருந்து விடுபட இதை விட சிறந்த எளிய பரிகாரம் இருக்க முடியாது.

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under