அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் - முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!!868035847


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் - முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்!!


அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை  துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.  அந்த.  வகையில் இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தக உள்ளிட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நிலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வந்தன.  கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படாமல் இருந்தது.

 

இந்த சூழலில்  2021 22 ஆம் கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்கு அரசு முடிவு எடுத்துள்ளது.  6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அனைத்து மாவட்ட மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு ஏற்கனவே சைக்கிள்களின் உதிரி பாகங்கள் வந்து இறங்கின.  சைக்கிள்களை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக நடப்பு  ஆண்டு  மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.  

 

இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா, இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று  இலவச மிதிவண்டிகளை  வழங்குகிறார். இதை தொடர்ந்து மாவட்டந்தோறும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under