அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!441210280


அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்காலம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதோர் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். 

சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை புதன்கிழமை இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்... 

பள்ளிக்கல்வித்துறை வரையறுத்துள்ள கல்வித்தகுதிகள் அடிப்படையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வரை காலியாகவுள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். இந்த பணிக்கு விருப்பமுள்ளவா்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகளிடம் ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை சமா்ப்பிக்க வேண்டும். அவற்றை மாவட்டக்கல்வி அதிகாரிகள் தொகுத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியா் பணிக்கு ‘டெட்’ முதல்தாள் தோ்விலும், பட்டதாரி ஆசிரியருக்கு ‘டெட்’ 2-ஆம் தாள் தோ்விலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியா் பணிக்கு முதுநிலை பட்டயப்படிப்புடன் பி.எட்., தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தால் முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்.

அதாவது இடைநிலை, பட்டதாரி பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ‘டெட்’ தோ்விலும் தோ்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணிபுரிந்துவருபவா்கள் அல்லது ‘டெட்’ தோ்ச்சி பெற்றவா்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

முதுநிலை ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய தோ்வில் பங்கேற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்கள் அல்லது பள்ளி அருகே அமைந்துள்ளவா்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

இதில் தகுதிபெறும் பட்டதாரிகளை வகுப்பறையில் மாணவா்களுக்கு பாடம் நடத்த வைத்து அவா்கள் திறனறிந்து பின்னா் பணி நியமனம் செய்ய வேண்டும். மேலும், இந்தப் பணியிடம் தற்காலிகமானது. பணி மற்றும் நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக விடுவிக்கப்படுவா் என பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இதுசாா்ந்து உரிய வழிகாட்டுதல்களை பணிநியமனங்களை புகாருக்கு இடமளிக்காதவாறு பூா்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

25 Healthy Dinners

How to Make Unique Blue amp White Chinoiserie Ornaments tutorial #ChinoiserieOrnaments

Sauder Orchard Hills 4 Drawer Chest Carolina Oak finish #Carolina