ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!2075669078


ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த முகாம்கள் மூலம் பொது விநியோகத் திட்டத்தில்  குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில்  ஜூலை 22 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.

 

இந்த முகாமில்  குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அத்துடன் ரேஷன் கடைகளில்  பொருட்களை நேரில் வருகை தர இயலாதவர்கள்,  மூத்தகுடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றும்  வழங்கப்படுகிறது. அத்துடன் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்களையும்  இம்முகாமில் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இந்த சேவையினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under