விமானத்திற்குள் திடீர் புகைமூட்டம்..! டெல்லியில் பதற்றம்..!1357472335
விமானத்திற்குள் திடீர் புகைமூட்டம்..! டெல்லியில் பதற்றம்..!
டெல்லியில் இருந்து சென்ற விமானத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டதால் மீண்டும் டெல்லிக்கு அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூர் என்ற பகுதிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று பயணிகளுடன் கிளம்பியது.
இந்நிலையில், விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் புகை வந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் திருப்பிவிடப்பட்டதால் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விமானத்தின் கேபிளில் இருந்து திடீரென புகை வந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment