தமிழக ரேஷன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மூலம் புகார்!1135913981
தமிழக ரேஷன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மூலம் புகார்!
தமிழக ரேஷன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மூலம் புகார்!
தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் மலிவு விலையில் உணவு பொருள்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் உணவு பொருள்கள் சரியாக கிடைக்காமல் இருந்தால் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் புகார்கள்:
தமிழக அரசு வழங்கும் நிதியுதவிகள், நலத்திட்டங்கள் பல ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் கடைகள் ஒரு அங்கம் வகிக்கிறது. தமிழக அரசு சலுகைகள் மட்டுமல்லாமல் மத்திய அரசு சலுகைகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன. அதன் படி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவு பொருள்கள் மட்டுமல்லாமல் உணவு பொருள்களும் வாழங்கப்படுகிறது. பிஎம் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலமாக இந்த உணவு பொருள்கள் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் மலிவு விலை பொருள்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும். மேலும் ரேஷன் கார்டு மூலமாக இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பலருக்கு உணவு பொருள்கள் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. அது குறித்து எங்கே புகார் அளிப்பது என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால் இலவச ரேஷன் பொருள்கள் தேவை இருப்பவர்களுக்கு சென்றடையாமல் இருக்கிறது.
இந்நிலையில் மக்கள் கரிப் கல்யாண் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கு தகுதி உடையவர்களாக இருந்தும் பலனைப் பெற இயலவில்லை என்றாலோ, அல்லது இலவச ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டாலோ வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரி தேவைப்படும். மேலும் புகார் செய்ய ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து கூட புகார் அளிக்கலாம். மேலும் மின்னஞ்சல் மூலம் புகார் செய்ய, உங்கள் புகாரை எழுதி, உங்கள் ரேஷன் கார்டு எண்ணுடன், ரேஷன் டிப்போவின் பெயரையும் அனுப்ப வேண்டும்.
மேலும் புகார் அளிக்க இலவச எண்ணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி கட்டணமில்லா எண்ணில் புகார் பதிவு செய்ய, 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 04325665566, 04428592828 எண்ணை தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமாகப் புகார் தெரிவிக்க [email protected] என்ற முகவரி அல்லது https://nfsa.gov.in/State/TN என்ற வெப்சைட் மூலமாகவும் நீங்கள் நேரடியாகப் புகார் கொடுக்கலாம்.
Comments
Post a Comment