தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!1076869548
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நாளை (ஜூலை 6) பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கும்பாபிஷேக திருவிழாவின் நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூஜைகளுடன் துவங்கியது. இந்த பூஜைக்காக கேரளா, தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இதை தொடர்ந்து வரும் ஜூலை 6ம் தேதி அதிகாலை 5.15 மணி முதல் 6.50 மணிக்குள் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை கடைபிடிக்கப்படும். அந்த வகையில் விடுமுறை தினத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும். இருப்பினும், அவசர கால பணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலகம் மற்றும் கிளை கருவூலகம் ஆகியவை வழக்கம் போல இயங்கலாம். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் ஜூலை 23ம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment