``ஜம்மு-காஷ்மீரை பாஜக-வால் கையாள முடியாது!\" - அரவிந்த் கெஜ்ரிவால்513574102


``ஜம்மு-காஷ்மீரை பாஜக-வால் கையாள முடியாது!\" - அரவிந்த் கெஜ்ரிவால்


ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் மே 12 அன்று ராகுல் பட் என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கொல்லப்பட்டதிலிருந்து, தொடர்ச்சியாகப் பல்வேறு காஷ்மீர் பண்டிட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை அந்தப் பகுதி மக்களிடையே வலுப்பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``பா.ஜ.க-வால் காஷ்மீரை கையாள முடியாது. அவர்களுக்கு கேவலமான அரசியல் மட்டுமே செய்ய தெரியும். காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பா.ஜ.க அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. உங்களின் தந்திரங்களை நிறுத்திக் கொள்ளுமாறு பாகிஸ்தானிடம் கூற விரும்புகிறேன். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருக்கும். காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது 1990-ம் ஆண்டு நடந்தது போன்றது'' என்றார்.

Comments

Popular posts from this blog

சர்வதேச டி20-ல் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இளம் வீரர் கஸ்டவ் புதிய உலக சாதனை737206445

அமெரிக்கா: கடும் பனி... ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்; 3 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ