கேலோ இந்தியா: தங்கம் வென்றார் தமிழக வீரர் தனுஷ்32205189


கேலோ இந்தியா: தங்கம் வென்றார் தமிழக வீரர் தனுஷ்


ஹரியாணா மாநிலம் பஞ்சகுலாவில் நடைபெறும் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் தொடரில் தமிழக வீரர் தனுஷ், மகாராஷ்டிராவின் கஜோல் சர்க்கார் தங்கம் வென்றனர்.

கேலோ இந்தியா யூத் கேம்ஸில் மொத்தம் 25 வகையான விளையாட்டுக்கள் ஆடப்படுகின்றன. இதில் சுமார் 8,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் மொத்தம் 1866 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதில் 545 தங்கம், 545 வெள்ளி,776 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும்.

இதில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் தமிழக வீரர் தனுஷ் ஸ்னாட்ச் பளுத்தூக்குதலில் 88 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க்கில் 102 கிலோ எடைத்தூக்கி மொத்தமாக 190 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

இதுவரை மகாராஷ்டிரா 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. ஹரியாணா 5 தங்கம், 6 வெள்ளி, 12 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் 2ம் இடத்தில் உள்ளது.

கபடியில் தமிழக ஆண்கள் அணி வெற்றி:
ஆண்களுக்கான கபடி போட்டியில் தமிழக அணி சண்டிகர் அணியை 58-25 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. பெண்களுக்கான கபடி போட்டியில் ஹரியாணா அணியிடம் தமிழக அணி 31-55 என்று தோல்வி தழுவியது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Comments

Popular posts from this blog