விஜய், ரஜினியை தொடர்ந்து நெல்சன் இயக்க போவது இவரையா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


விஜய், ரஜினியை தொடர்ந்து நெல்சன் இயக்க போவது இவரையா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


விஜய் படம் மட்டும் இல்லாமல், அதற்கு பிறகு ரஜினி படத்தையும் இயக்க போகிறார் என்பதால் பீஸ்ட் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ரஜினி ரசிகர்களும் ஆர்வம் காட்டினர். ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் நெல்சன் மீதான எதிர்பார்ப்பு, தற்போது ரசிகர்களிடம் பயமாக மாறி உள்ளதாகவும் கருத்து நிலவி வருகிறது.

பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தலைவர் 169 படத்தில் இருந்து ரஜினி, நெல்சனை நீக்க விட்டதாகவும், தலைவர் 169 படமே கைவிடப்பட்டதாகவும் கூட வதந்திகள் பரவியது. கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 ஸ்டில்லை கவர் போட்டோவாக ரஜினி மாற்றியதை அடுத்து தலைவர் 169 கன்ஃபார்ம் ஆகி உள்ளது. அதோடு நெல்சனையும் ரஜினி மாற்றவில்லை என்ற உறுதியான தகவலும் வெளியாகி உள்ளது.

தற்போது தலைவர் 169 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை தீவிரமாக கவனித்து வருகிறார் நெல்சன். கதை விரிவாக்கத்திற்காக வாரம் இருமுறை ரஜினியை சந்தித்து, கதை டிஸ்கஷனும் நடத்தி வருகிறார். ஜுலை மாதத்தில் தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில், லேட்டஸ்ட் தகவலாக பீஸ்ட் படத்தில் விஜய், தலைவர் 169 படத்தில் ரஜினி ஆகியோரை தொடர்ந்து நெல்சன் அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தலைவர் 169 படத்தை முடித்த பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை தான் நெல்சன் இயக்க போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதன் முதல்படியாக, ஒரே வரியில் தனுஷிடம் கதை சொல்லி உள்ளாராம் நெல்சன். ஆனால் தனது கைவசம் ஏற்கனவே பல படங்கள் உள்ளதால் நெல்சன் படம் பற்றி இதுவரை தனுஷ் எந்த முடிவும் எடுக்கவில்லையாம்.

நெல்சனுக்கு ஓகே சொல்வாரா

தனுஷ் சமீபத்தில் தான் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தின் ஷுட்டிங்கை நிறைவு செய்துள்ளார். தற்போது டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம், வெங்கி அட்லுரி இயக்கும் வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இதனால் தனது அடுத்த படம் பற்றி தனுஷ் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் தலைவர் 169 படத்தை முடிப்பதற்குள் தனுஷிடம் ஓகே வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் நெல்சன்.

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under