குட்டப்பாவோட ஆட்டத்தை பார்க்க ரெடியா... ரிலீஸ் தேதி அறிவிப்பு


குட்டப்பாவோட ஆட்டத்தை பார்க்க ரெடியா... ரிலீஸ் தேதி அறிவிப்பு


பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பல பிரபலமான படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது தனது இயக்கத்தை நிறுத்தி வைத்துவிட்டு படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் தயாரிப்பு பணியையும் தொடர்ந்து வருகிறார்.

தற்போது இவர் தயாரித்து நடித்துவரும் படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தில் ரோபோ ஒன்று சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரவிக்குமார் மற்றும் ரோபோ இடையிலான காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.

படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் ஹிட்டடித்த ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட் மற்றும் குளோபல் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து படத்தை இயக்கியுள்ளனர். கேஎஸ் ரவிக்குமாருடன் யோகிபாபுவும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 6ம் தேதி திரையரங்குளில் படம் ரிலீசாக உள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்படுத்திய சிறப்பான அனுபவத்தை திரையரங்குகளில் பார்க்க தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

சூப்பர்ஹிட் இயக்குநர்

கமல், ரஜினி, சரத்குமார் உள்ளிடட கதாநாயகர்களை வைத்து சிறப்பான வெற்றிப் படங்களை கொடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இயக்கத்தையும் மேற்கொள்ள கதையை தயாரித்து வருகிறார். அடுத்தது அவரது இயக்கம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog