EXCLUSIVE | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்கிறார்?
பாகிஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.
பொருளாதார சுணக்கத்திற்கு இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது.
மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment