’பீஸ்ட்’ ஆடியோ ஃபங்சன் நடத்தியே தீரவேண்டும்: விஜய் பிடிவாதம் என தகவல்


’பீஸ்ட்’ ஆடியோ ஃபங்சன் நடத்தியே தீரவேண்டும்: விஜய் பிடிவாதம் என தகவல்


தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முதல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கிடையாது என்றும் இன்னொரு பாடல் மட்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த படக்குழு விரும்பியதாகவும் ஆனால் விஜய் அதற்கு மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது .

இந்த நிலையில்’பீஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததில் விஜய்க்கு உடன்பாடு இல்லை என்றும் இசை வெளியீட்டு விழா ஒரு படத்திற்கு நல்ல புரமோஷன் என்பதால் கண்டிப்பாக அதனை நடத்திய தீர வேண்டும் என்று விஜய் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் ஆடியோ விழாவை பொதுமக்கள் மத்தியில் நடத்தாமல் நேரடியாக சன்டிவியில் ஒளிபரப்பாகும் வகையில் நடத்தலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இது குறித்து முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

விஜய்யின் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் இந்த முறையும் கண்டிப்பாக இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று கூறப்படுகிறது.

 

Spread the love

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under