டியூபில் டீசல் உறிஞ்சிய வாலிபர் மூச்சுத்திணறி பலி
துரைப்பாக்கம்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுசூட்(40). கடந்த 22ம் தேதி வேலை தேடி குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 25ம் தேதி துரைப்பாக்கம் சாலை விரிவாக்கம் திட்டத்தில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த சுஜித்பாண்டே(40) என்பவரை தேடி சென்றார். அங்கு மோட்டார் இயக்க 200 லிட்டர் கேனில் டீசல் வைத்திருந்தனர். அங்குள்ள ஊழியர்கள் 20 லிட்டர் கேனில் அதை மாற்ற டியூப் கொண்டு உறிஞ்சி கொண்டிருந்தனர். இதற்கு, சோனுசூட் உதவி செய்தார். அப்போது டீசல் அவரது தொண்டையில் அடைத்துகொண்டது. இதனால், மூச்சுவிட சிரமப்பட்டார். உடனே, அவரை அக்கம்பக்கத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
Tags:
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment