சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்க அனுமதி: சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் குஷி
சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்க அனுமதி: சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் குஷி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க 139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானமான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் உள்ளூர் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புதுப்பிக்க வேண்டும் என பல வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூபாய் 139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான அனுமதியை மாநில அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் நீர்நிலை மற்றும் நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்க பணிகள் நடைபெற கூடாது என்று நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்கும் பணி தொடங்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Spread the love
Comments
Post a Comment