அடுத்த 2 வாரங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – ஊழியர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க!


அடுத்த 2 வாரங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – ஊழியர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க!


சிங்கப்பூரில் மார்ச் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் தொடர்ந்து மழை இருக்கும் என்று சிங்கை வானிலை மையம் இன்று (மார்ச்.17) தெரிவித்துள்ளது.

காலை நேரங்களில் சிங்கப்பூரில் அவ்வப்போது பலத்த காற்றுடன் பரவலாக மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் நேரங்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க – Agents-களிடம் போகாமல் சிங்கப்பூருக்கான ‘S Pass’ அப்ளை செய்வது எப்படி? சிம்பிள் வழி இதோ!

சில நாட்களில் மாலை வரை இடியுடன் கூடிய மழை நீடிக்கலாம். காற்று பலமாக வீசும். ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாத மழை சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 7 அன்று ஜூரோங் வெஸ்டில் பதிவான 134.2 மிமீ மழையானது, மாதத்தின் முதல் பாதியில் பதிவான அதிகபட்ச மழைப் பொழிவாகும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச தினசரி அதிகபட்ச வெப்பநிலையான 36 டிகிரி செல்சியஸ் P-aya Lebarல் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் குறைந்தபட்ச தினசரி வெப்பநிலை 22.1 டிகிரி செல்சியஸ் அட்மிரால்டி மற்றும் ஜூரோங்கில் முறையே மார்ச் 2 மற்றும் 10 அன்று பதிவாகியுள்ளது.

மழை குறித்த தகவலை வானிலை மையம் முன்கூட்டியே தெரிவித்திருப்பதால், சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முன்னெச்சரிக்கையாக இருப்பது இன்னும் அவசியம்.

 

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under