கொடூர தந்தை! தான் பெற்ற மகளையே இரண்டு பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம், மேல காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (45). இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டு பெண் குழந்தைகள் தந்தை வளர்ப்பிலும், ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை தாத்தா பாட்டியிடமும் வளர்ந்து வந்துள்ளனர். தந்தையிடம் வளர்ந்து வந்த பெண் குழந்தைகளில் ஒருவர் மாற்றுத்திறனாளி (13). இந்நிலையில், தந்தை கார்த்திக், குடிபோதையில் தினந்தோறும் அந்த மாற்றுத்திறனாளி மகளை பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனை தெரிந்து கொண்ட சிறுமியின் மாமன் சுதாகர் மற்றும் அதே தெருவை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் இந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குழந்தையின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து அருகில் வசிப்பவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதை கேட்ட அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், திருவாரூரில் உள்ள சமூக குழந்தைகள் நலன் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவ...