எச்.ராஜா பரபரப்பு ட்விட்..! உண்மையை ஒப்புக்கொண்ட கமல்ஹாசன்.!! இந்து மதம் என்பது சோழர்களின் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமண மதங்களே இருந்தது என்று பேசிய கமல், நண்பரிடம் இந்து மதத்தை ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனை எச்.ராஜா விமர்சித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில், சியான் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்தீபன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், திரிஷா மற்றும் கார்த்திக் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வைத்து சோழர்களின் வரலாறுகளை படமாக எடுத்துள்ளனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன் இந்து மதத்தை திணித்து நமது அடையாளத்தை கைப்பற்றுகிறார்கள் என்று பேசியிருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே நடிகர் கமல் ஹாசன் மற்றும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கமல் ஹ...